வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தினாரா ரஜினி ? சத்தியம் தியேட்டரில் நடந்தது என்ன ?
சென்னை சத்தியம் தியேட்டரில், சமீபத்தில் 2.0 படம் பார்க்க வந்த ரஜினி குடும்பத்தினர், உடன் வந்த வேலைக்கார பெண்ணை படம் முழுவதும் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்த் ஒரு பக்கம் அரசியலிலும், மறு பக்கம் சினிமா பணியிலும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் பிரவேசத்தில் குதித்து இந்த மாதத்துடன் ஓர் ஆண்டு முடிவடையும் நிலையில், கட்சியின் பெயரையோ, சின்னம் குறித்தோ ரஜினி இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும், தமிழகம் முழுவதும் அரசியலுக்கான நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ந்து, தனது சினிமா பயணத்தில் கபாலி, காலா, 2.0 அடுத்து பேட்ட படம் பொங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. 2.0 படம் ரிலீசாகி சுமார் 600 கோடி வசூல் எட்டியது.இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று சென்னை சத்தியம் தியேட்டரில் 2.0 படம் பார்க்க வந்துள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த புகைபடத்தில் பெண் ஒருவர் ரஜினி குடும்பத்தினரின் பின்னால் நின்றிருந்தார். அப்போது, அவர் ரஜினி வீட்டின் வேலைக்கார பெண் என்றும் அவர் படம் முழுவதும் நின்றுக் கொண்டே இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
தியேட்டரில் அத்தனை சீட்டுகள் காலியாக இருந்தும் வேலைக்கார பெண்ணை அமர்ந்து படம் பார்க்க கூறாமல், படம் முழுவதும் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாக ரஜினிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.