பேட்ட டீஸர் நாளை ரிலீஸ் ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான பிறந்த நாள் ட்ரீட்!
ரஜினியின் பிறந்த நாளான நாளை பேட்ட படத்தின் டீஸர் வெளியிடப்படும் என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்ட படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகிறது.
கடந்த டிசம்பர் 9ம் தேதி சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக பேட்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அனிருத் பேட்ட படத்தின் பாடல்களை மேடையில் பாடி அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில், ரஜினி மற்றும் விஜய் சேதுபதி பேசிய வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரஜினியின் 68வது பிறந்த நாள் நாளை டிசம்பர் 12ம் தேதி அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட்டாக பேட்ட படத்தின் டீஸர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பேட்ட இசை வெளியீட்டு விழாவை விஸ்வாசம் ஃபர்ஸ்ட் சிங்கிளான அடிச்சு தூக்கு பாடல் பின்னுக்கு தள்ளியது. நாளை, விஸ்வாசம் பாடலை பின்னுக்கு தள்ளி பேட்ட படத்தின் டீஸர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.