பாஜக செல்வாக்கு இழந்ததையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன- ரஜினிகாந்த்

பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கை இழந்துவிட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. இம்மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், பாஜக செல்வாக்கை இழந்துவிட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

இம்முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளன என்றார். மோடி பிரசாரம் செய்தும் பாஜக தோல்வி அடைந்துள்ளதே என்ற கேள்விக்கு, அதுவும் செல்வாக்கு இழந்தைதைத்தான் காட்டுகிறது என்றார்.

அண்மையில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுவதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News >>