ஜீவாவுக்கு காயத்ரி கிருஷ்ணா ஜோடி இல்லை?
ரத்ன சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவாவுடன் நடிக்கும் காயத்ரி கிருஷ்ணா, அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம்.
மேற்கு தொடர்ச்சி மலை என்னும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் காயத்ரி கிருஷ்ணா. இவர் தற்போது ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவாநடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக இல்லாமல் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க காயத்ரி கிருஷ்ணா ஒப்பந்தமாகியுள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆக்ஷன் ஜானரில் இந்த படம் உருவாகி வருகிறது.
மாயவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்பு விஜய்சேதுபது கிளாப் அடித்து துவங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.