5 மாநில தேர்தல் முடிவு: புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் - கமல்ஹாசன் ட்வீட்

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் பாஜக 106 தொகுதிகளிலும், காங்கிரஸ் 112 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும், பாஜக 49 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வென்றுள்ளன. தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 44 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் வென்று முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம், 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கிறது.மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்த நிலையில், இந்த தேர்தல் மூலம் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கடல்ஹாசன், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் . மக்கள் தீர்ப்பு இது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More News >>