காங்கிரஸுக்கு மிகப் பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது: ராகுல் காந்தி
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் வென்றிருப்பதன் மூலம் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று இரவு செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:
சட்டசபை தேர்தல்களில் பெற்ற வெற்றி கட்சி ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி. தற்போது மாற்றத்துக்கான நேரம் உருவாகி உள்ளது.
கடந்த தேர்தலின் போது மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவும் மோடியும் வெல்ல முடியாது.
தற்போதைய வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.