பிக்பாஸ் ஓவியா குத்தாட்டத்தில் வெளியான டியோ ரியோ டியா பாடல்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா குத்தாட்டத்தில் வெளியான முதல் பாடலான டியோ ரியோ டியா லிரிக் வீடியோ ரிலீசாகியுள்ளது.

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள சிலுக்குவார்பட்டி படத்தின் டீசர் வெளியாகி கலக்கிய நிலையில், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

நீண்ட காலம் களித்து ராட்சசன் படம் மூலம் தனது மறுமுகத்தை  இந்த திரையுலகிற்கு காட்டியவர் விஷ்ணு விஷால். அடுத்த வாரம் கடும் போட்டிக்கு இடையே டிசம்பர் 21ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

ஒரு நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. டியோ ரியோ டியா என தொடங்கும் இந்த பாடலின் வரிகள் அனைவரையும் ஆடவைக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஓவியா வெள்ளித்திரையில் குத்தாட்டம் போட்ட பாடல் இது என்பதால், ஓவியா ஆர்மி இந்த பாடலை வைரலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

More News >>