மேகதாது அணை: அவமதிப்பு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது. இதனால், மேதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதேபோல், கர்நாடக அரசுக்கு எதிராக புதுவை அரசு தொடர்ந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.