திடீர் திருமணம் செய்து கொண்டாரா நடிகர் சதிஷ் ?
காமெடி நடிகர் சதிஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் புகைப்படத்தை முத்தையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் நண்பனான நடிகர் சதிஷ், எதிர்நீச்சல் படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித் துள்ளார் .
இந்நிலையில், சதிஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போட்டோ வை முத்தையா வெளியிட்டு ள்ளார். அது தற் போ து வைரலாகி வருகிறது.
சதிஷ் திருமணம் செய்துவிட்டார் என்று நினைத்து அனைவரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். மேலும் அவருக்கு பலரும் திருமண வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.
ஆனால், உண்மையாக ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட சீன் என்று நடிகர் சதிஷ் கூறியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் நடிகர் வைபவ் உள்ளார். சதிஷின் உயிர்த் தோழன் சிவகார்த்திகேயன் இல்லாததும் குறிப்பிடத்தக்கது.