என்னையா மிரட்டுறீங்க.. 5 மாநில தேர்தலில் மரண அடி வாங்கிய பாஜகவுக்கு ரிவிட் அடித்த ரஜினிகாந்த்
5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பது பாரதிய ஜனதா கட்சிதான். ரஜினிகாந்தும் பாஜகவின் நெருக்கடிக்கு பயந்து கட்சி தொடங்குவதாக அறிவித்து ஓராண்டாகிவிட்டது.
அதேநேரத்தில் முக்கிய பிரச்சனைகளில் பாஜகவின் குரலாகவே பேசி வருகிறார் ரஜினிகாந்த். அண்மையில் பாஜகவுக்கு எதிராக சென்னை விமான நிலையத்தில் ஒரு கருத்தை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இதை விரும்பாத பாஜக மேலிடம் ரஜினியை மீண்டும் பேட்டி கொடுக்க வைத்து அவரை பாராட்ட வைத்தது. ரஜினிகாந்தை பொறுத்தவரையில் பாஜகவின் நிதின் கட்காரியின் ஸ்லீப்பர் செல்லாகவே இருந்து வருகிறார்.
வரும் லோக்சபா தேர்தலில் எப்படியாவது பிரதமர் பதவி தமக்கு வந்துவிடாதா? என்கிற கனவில் நிதின் கட்காரி இருந்து வருகிறார். இவர்தான் ரஜினிகாந்தை பின்னிருந்து இயக்கி வருகிறார்.
இந்நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்று நிதின் கட்காரியுடன் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அப்போது, இது எதிர்பார்த்த ஒன்றுதான்... நீங்கதான் நல்ல முடிவை சொல்லனும் என கூறியிருக்கிறார் கட்காரி.
மேலும் அமித்ஷா, மோடியின் ஆதிக்கம் தொடர்பாகவும் ரஜினிகாந்துடன் சில விஷயங்களை கட்காரி பகிர்ந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்தே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு; பாஜக செல்வாக்கை இழந்து வருகிறது என அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
கடந்த முறை தாம் பாஜகவுக்கு எதிராக கருத்து கூறிவிட்டதற்காக டெல்லி மிரட்டியது; இனி அவர்கள் மிரட்டலுக்கு பயப்படுவதில்லை என முடிவெடுத்துவிட்டதையே ரஜினியின் விமர்சனம் வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-எழில் பிரதீபன்