இந்திய வரலாற்றில் முதன் முறையாக!! - போராட்டத்தில் குதித்த நீதிபதிகள்

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் தீபக் மிஸ்ரா. இந்நிலையில் நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்கொடி தூக்கியுள்ளனர். நீதிபதிக்கு வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நான்கு நீதிபதிகளும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுல் இரண்டாவது இடத்தில் இருக்கும் செலமேஸ்வர் கூறுகையில், “நாங்கள் தேசத்திற்கும், எங்களது நீதிமன்ற அமைப்பிற்கும் கடமைப்பட்டிருக்கிறோம்

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இப்படியே போனால் இந்திய ஜனநாயகம் நிலைக்காது” என்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திப்பது என்பது வழக்கமான நடைமுறையில் இருந்தது இல்லை. கடந்த டிசம்பர் மாதம் லக்னோவில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி முறைகேடுகள் குறித்த வழக்கில் நீதிபதி செலமேஸ்வர் தலைமை நீதிபதியுடனான மோதல் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

More News >>