ரஜினியின் கோட்டை இந்த பேட்ட- தெறிக்க விடும் டீஸர்!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 68வது பிறந்த நாள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் பேட்ட டீஸரை தற்போது வெளியிட்டு உற்சாகமூட்டியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படம் வரும் பொங்கலுக்கு தலைவர் பொங்கலாக வெளிவருகிறது.

பேட்ட படத்தின் டீஸரில் ரஜினி பேக் போர்ஷனில் பாட்ஷா ரஜினியாக இளமை தோற்றத்துடன் மாஸாக நடந்து வருகிறார். கடா மீசையுடன் வேட்டி சட்டையுடன் வரும் பிளாஷ்பேக் போஸ்டர் மற்றும், அனிருத்தின் மரண மாஸ் பிஜிஎத்துடன் டீஸர் வேற லெவலில் தெறிக்க விடுகிறது.

டீஸரின் கடைசி காட்சியாக எந்திரன் மற்றும் 2.0வில் வருவது போன்று கண்ணாடி முன் தலைவர் கொடுக்கும் ஸ்டைல் லுக்கே தாறுமாறு.. ரஜினி ரசிகர்கள் டீஸரை உலகளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

எத்தனை சாதனைகளை இது படைக்கப் போகிறது என்பதை விரைவில் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>