வெள்ளந்தி சனங்களின் விழிநீர் கசிவுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள்... பாஜக மீது அதிமுக அட்டாக்

மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வெள்ளந்தி சனங்களின் விழிநீர் கசிவுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள் என விமர்சித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா.

நமது அம்மா நாளேடு வெளியிட்டுள்ள கவிதை:

ஐந்து மாநிலதேர்தல்முடிவுகள்

ஆளும்பாஜகவுக்கு

அதிர்ச்சிதந்திருக்கு

அதலபாதாளத்தில்கிடக்கும்காங்கிரசுக்கோ

அளவில்லாமகிழ்ச்சிதந்திருக்கு

மிசோரம்தேசிய முன்னணி

தெலங்கானாராஷ்டிரிய சமீதிகட்சிகளுக்கோ

மாநிலகட்சிகளின்மகத்துவத்தைஉணர்த்திய

மிடுக்கானஎழுச்சிதந்திருக்கு

இது அடுத்துவரவிருக்கும்

பாரத தேசத்தின்பதினேழாவது

மக்களவைத் தேர்தலுக்கு

முன்னோட்டமாகஅமையுமா?

இல்லை

தவறுகளைதிருத்தி

தங்களைவெற்றிப் பாதைக்கு

திருப்பிக் கொள்ள

சரிவைசந்தித்தவர்களுக்கு

சந்தர்ப்பமாகமாறுமா?

இதுபோல

ஆளுக்கொருபக்கம்அலசல்கள்

வீதிக்குவீதிவிமர்சனங்கள்

ஆனாலும்

ஒரேநாடுஒரே வரிஒரே கட்சிஒரே ஆட்சிஎன்பதாக

ஒளிவட்டம்வரைந்து கொண்டு

அதிகாரபரிவட்டம்கட்டிக் கொள்ள

ஆவல்கொண்டவர்கள்

ஐந்து மாநிலதேர்வு முடிவு

மாநிலத்தை வழிநடத்தும்தலைமையை

தேர்வு செய்யும்முடிவே தவிர

தேசத்தின்ஆள்வோரை

தேர்ந்தெடுக்கும்தீர்ப்பல்லஎன்பதாக

தத்துவார்த்தம்பேசிதப்பிக்கக் கூடாது..

பண மதிப்பின்மைஏற்படுத்தியபாதிப்புகள்

முறையாகஅலசி ஆராய்ந்து

முன்வைக்கப்படாதஅவசரஜிஎஸ்டியால்எழுந்த

ஆவேசக்கோபங்கள்

வரலாறுகாணாதஅளவில்

சர்வதேசசந்தையில்கச்சாஎண்ணெய் விலை

வெகுவாகசரிவுற்றநிலையிலும்

தொடரும்எரிபொருள்விலையேற்றம்...

இந்தியபணத்தின்வீழ்ச்சி

இப்படியாகவெள்ளந்திச்சனங்களின்

விழிநீர்கசிவுகளே

இப்போதுவாக்குப்பதிவுஎந்திரங்கள்மூலம்தரப்பட்டிருக்கும்

பதிலாகஇருக்கிறதுஎன்பதை

உரியவர்கள்ஏற்றுக்கொண்டு

உடனடித் தீர்வுக்குவழி கண்டால்

இன்றையகசந்த காலம்

நாளை வசந்தகாலமாகவும்மாறலாம்தானே...

More News >>