கிளைமேக்ஸை இழுத்தடிக்கும் இயக்குனர் கடுப்பில் நயன்தாரா!
ஐரா படத்தின் கிளைமேக்ஸ் எடுக்க தாமதிப்பதால் இயக்குனர் சர்ஜுன் மீது நயன்தாரா கோபமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா தற்போது அஜித்துடன் விஸ்வாசம், விஜயுடன் தளபதி63, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி,நிவின்பாலியுடன் ஒரு படம் என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களான ஐரா, கொலையுதிர்காலம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். கொலையுதிர்காலம் படத்தை ஜனவரி மாதம் ரீலிஸ் செய்ய முடிவுசெய்துள்ள படக்குழு அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக செய்துவருகிறது.
மேலும், லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கியவர் மற்றும் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குனருமான சர்ஜூன் இயக்கத்தில் நயந்தாரா ஐரா படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முழுமை அடையும் நிலையில் இந்த படத்தின் கிளைமேக்ஸ் இன்னும் எடுக்கவில்லையாம், மேலும் இந்த படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடலாம் என படக்குழு நினைத்திருந்த நிலையில் சர்ஜூன் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை எடுக்க தாமதிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் நாயகி நயன்தாரா, இயக்குனர் சர்ஜூன் மீது பயங்கர கோபமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும்,ஐரா படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கவும் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறதாம்.