சசிகலா பெயரைக் கெடுத்தால் ரூபா மீது மானநஷ்ட ஈடு வழக்குத் தொடுப்பேன்! புகழேந்தி

சசிகலா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், மானநஷ்ட ஈடு வழக்குத் தொடுப்பேன் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களுரு சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் செய்தி கொடுக்க கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாரயணராவ், ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகக் டிஐஜி ரூபா மவுட்டில் குற்றஞ்சாட்டியுள்ளர். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக மாநில அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளரும் செய்தி தொடர்பாளருமான புகழேந்தி ரூபாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், '' ரூபாவின் நேர்மை குறித்து சந்தேகிக்கவில். அதேவேளையில் துறை சார்ந்த புகாரை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ஊடகங்களில் ஏன் தெரிவிக்க வேண்டும். வீடியோ ஆதாரங்களை அளிக்க வேண்டியதுதானே.. சசிகலாவை வைத்து ரூபா பிரபலமடையப் பார்க்கிறார். நேர்மையான அதிகாரியான டி.ஜி.பி. சத்யநாராயணராவ் மற்றும் எங்கள் தலைவில சசிகலாவின் பெயரை ரூபா கெடுத்து விட்டார். எனக்கு சத்யநாராயாணாவுடன் பழக்கம் உண்டு. எவ்வளவுதான் பழகினாலும் நேர்மை தவறாக அதிகாரி அவர். என்னிடம் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சசிகலாவை நீங்கள் பார்க்க முடியும் என்று கூறியவர். சசிகலா சிறை உணவையே சாப்பிடுகிறார். வெளியே இருந்து உணவு கொண்டு வந்தால் கூட சாப்பிடுவதில்லை. ஏன் பிஸ்கட் துண்டைக் கூட தொடுவதில்லை'' எனக் கூறியுள்ளார்.

More News >>