96 படத்தின் இண்டர்மிஷன் டெலிடட் சீன் ரிலீஸ்!
96 படத்தின் இடைவேளைக்கு முன்பாக தோன்றும் காட்சியில், கத்தரிக்கப்பட்ட மொத்த வசனங்களையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி இந்த ஆண்டின் மாபெரும் காதல் படமாக வெற்றி பெற்றது 96 திரைப்படம்.
பழைய நட்பு, காதல், கண்ணியம் என பல நற்குணங்களை திரையில் பாசிட்டிவ் எனர்ஜி அளிக்கும் விதமாக பிரேம் குமார் இயக்கியிருந்தார். ராம் மற்றும் ஜானு கிரேஸ் சமீபத்தில், நடைபெற்ற பேட்ட இசை வெளியீட்டு விழா வரை தொடர்ந்தது.
இந்நிலையில், தற்போது திங்க் மீயுசிக் இந்தியா, 96 படத்தின் இடைவேளைக்கு முன்னர் வரும் கார் காட்சியில், எடுக்கப்பட்ட நீண்ட வசனங்களை தற்போது எடிட் செய்யாமல் வெளியிட்டுள்ளது.
இதில், போத்திஸ் விளம்பரம் மற்றும் பி.சி. ஸ்ரீராம் புகழாரம் இருந்ததால் இந்த காட்சிகள் டெலிட் செய்யப் பட்டிருக்கலாம்.
முன்னதாக பாடகி ஜானகியம்மா காட்சிகள் டெலிடட் வீடியோவாக வெளியானது குறிப்பிடத்தக்கது.