சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலரை வெளியிடும் துரைசிங்கம்
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டிரைலரை சூர்யா நாளை வெளியிடுகிறார்.
இயக்குநர் செல்லா இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் அடுத்த வாரம் டிசம்பர் 21ம் தேதி ரிலீசாகிறது. 6 பெரிய படங்களுடன் விஷ்ணுவின் இந்த படமும் மோதவுள்ளதால், உதய்நிதி ஸ்டாலினின் உதவியை விஷ்ணு நாடினார்.
உதய்நிதி ஸ்டாலினும், தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை வெளியிட முன் வந்தார். இந்நிலையில், நேற்று வெளியான டியோ ரியோ டியா பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிரைலரை நாளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த படத்தில் விஷ்ணு போலீஸாக நடிப்பதால், படத்தின் பேரிலும் சிங்கம் இருப்பதால், துரை சிங்கமாக நடித்த சூர்யா, நாளை மாலை 6 மணிக்கு சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டிரைலர் வெளியாகிறது.