நாங்க திமுகவுக்கு வரலை.. செந்தில் பாலாஜிக்கு நோஸ்கட்- அதிமுகவில் ஐக்கியமான ஆதரவாளர்கள்!
தினகரனிடம் இருந்து விலகி திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி. அதேநேரத்தில் அவரது ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவதால் கரூர் அரசியல் களம் அனல் பறக்கிறது.
தினகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஆனால் தினகரனின் நடவடிக்கைகள் செந்தில் பாலாஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
குறிப்பாக தினகரன் மனைவி அனுராதாவின் ஆதிக்கத்தை முழுமையாக வெறுப்பவராக இருந்தார் செந்தில் பாலாஜி. இன்னொரு தினகரனின் பரம எதிரியான இளவரசி குடும்பமும் செந்தில் பாலாஜிக்கு தூபம் போட்டு வளைத்தது.
தற்போது திமுகவில் இணைய முடிவு செய்துவிட்டார் செந்தில் பாலாஜி. சென்னையில் முகாமிட்டிருக்கும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களிடம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆனால் ஆதரவாளர்களோ அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு திரும்புவதில்தான் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இன்றும் கூட கரூர் அமமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் மஞ்சுஶ்ரீ உள்ளிட்ட ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்.