சில்மிஷத்தால் போலீசிடம் செருப்படி வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்
திருச்சி போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்சியை சேர்ந்த 32 வயதான பெண், சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் 2ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். பெண் போலீசுக்கு அவ்வபோது இரவுப்பணிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தன்றும் கூட பெண் போலீசார் இரவுப் பணியில் இருந்துள்ளார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பாலசுப்பிரமணியன் (54) என்பவருக்கும் அன்று இரவுப்பணி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் பேச்சுக் கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் திடீரென அப்பெண் காவலரை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அணிந்திருந்த ஷ¨வை கழட்டி பால சுப்பிரிமணியை சராமாரியாக அடித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்த பெண் காவலர், சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சியை ஆதாரமாக கொண்டு மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் நேரில் சென்று புகார் தெரிவித்தார்.
இந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ் சுப்பிரண்டு, பணியின்போது தவறாக நடக்க முயன்ற காரணத்தால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
பெண்களை காக்க வேண்டிய போலீசாரே, பெண் போலீசாரிடம் தவறாக நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.