கார்த்தியின் அடுத்த படத்தில் கதாநாயகி இல்லை!
இளம் முன்னனி ஹீரோக்களில் சிறந்த நடிகரான கார்த்தி தற்போது ஜோடி இல்லாமல் ஒரு படத்தில் நடிக்கிறார்.
தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கும் கார்த்தியின் தேவ் படம் விரைவில் வெளியாகிறது. இதில், ரகுல் ப்ரீத்சிங் கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், மாநகரம் படத்தை இயக்கி புகழ் பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்கு ஜோடியே இல்லையாம்.
இந்த படத்தில் நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் பல நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படம் சென்னை மற்றும் திருநெல்வேலியில் படமாக்கப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது.