சர்வதேச ஐஏஆர்ஏ விருதை பெற்றார் நடிகர் விஜய்!
மெர்சல் படத்திற்காக லண்டனுக்கு சென்று சர்வதேச விருது பெற்றுள்ளார் நடிகர் விஜய்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மெர்சல். இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்து இருந்தார், அவருடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜெ. சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார், இந்த படத்தின் சிறந்த பாடலான ஆளப்போறான் தமிழன் பாடல் பல விருதுகளை அள்ளியது.
இந்த படத்தில் நடித்ததற்காக கடந்த செப்டம்பர் மாதம் விஜய் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். தற்போது சிறந்த நடிகர்களுக்கான சர்வதேச விருதை மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் பெற்றுள்ளார்.
நடிகர் விஜய், ஸ்டார் வார்ஸ் பட்டத்தில் நடித்த ஜான் போயிகா, கெட் அவுட் படத்தில் நடித்த டேனியல் கலுயா, ஜாமி லோமஸ் படத்தில் நடித்த கிரிஸ் அட்டோ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இணையத்தில் நடந்த ஓட்டெடுப்பின்படி சிறந்த நடிராக விஜய் தேர்தெடுக்கப்பட்டார்.
லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழா விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய், விருதை நேரில் சென்று பெற்றுக்கொண்டார். மேலும் விருது வழங்கிய ஐஏஆர்ஏ அமைப்பு அதற்கான புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.