செம்ம டிஷ்.. ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் ரெசிபி
ஹலோ நண்பர்களே.. இன்னைக்கு நாம ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் :
ஸ்வீட் கார்ன் – ஒன்றரை கப்ரவை – ஒரு கப்துருவிய சீஸ் – அரை கப்வெங்காயம் – ஒன்றுகொத்தமல்லித் தழை – சிறிதளவுகரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டிமிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டிசாட் மசாலா – ஒரு தேக்கரண்டிபால் – 2 கப்மைதா – 1 கப்பிரெட் தூள் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – பொரிக்கத் தேவையானஅளவு
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ரவையை வறுத்தெடுத்து பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு அந்த மாவை சிறியதாக எடுத்து சப்பாத்தி போல் உருட்டி அதன் நடுவே தயார் செய்து வைத்துள்ள மசாலா கலவையை வைத்து ரோல் போல செய்து கொள்ளவும். இப்படி அனைத்தையும் செய்து கொள்ளவும்.
இந்த மசாலா ரோலை பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும். இதேபோல் மீதமுள்ள கலவையிலும் ரோல்லைத் தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ரோல்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் ரெடி..