அம்புட்டவனுக்கு அஷ்டமத்துல சனி... செந்தில் பாலாஜி மீது பாய்ந்த திவாகரன் மகன்
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவதை தினகரன் தரப்பும் மட்டுமல்ல திவாகரன் கோஷ்டியும் கடுகடுவுடன் பார்ப்பதை அவரது மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் வெளிப்படுத்தியுள்ளார்.
சசிகலா குடும்பத்தை பொறுத்தவரையில் தினகரன், திவாகரன், இளவரவசி குடும்பம் தனித்தனியாக ஆதிக்கம் செலுத்துகிறது. சசிகலா சிறையில் இருப்பதால் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை.
இளவரசி குடும்பத்தின் (இளவரசி மகள் கிருஷ்ணபிரியா) செல்வாக்கில் உள்ள தினகரன் கோஷ்டியின் செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாவது உறுதியாகி உள்ளது. இதனால் ஒட்டுமொத்த சசிகலா குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது.
இதனை வெளிப்படுத்தும் விதமாக, சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தம்முடைய முகநூல் பக்கத்தில், செந்தில் பாலாஜியை நினைத்தால் எனக்கு ஒன்று தோன்றுகிறது.. ஓடுனவனுக்கு ஒன்பதுல குரு அம்புட்டவனுக்கு அஷ்டமத்துல சனி என விமர்சித்துள்ளார்.