5 மாநில சட்டசபை தேர்தல்களில் மரண அடி... சலுகைகளை அள்ளி வீச மோடி பக்கா ஸ்கெட்ச்

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை சரிக்கட்ட ஏராளமான சலுகைகளை அள்ளி வீசி மக்களவை பொதுத் தேர்தலை சந்திக்க மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது. காங்கிரசால் தேசிய அளவில் அணியை உருவாக்கி மோடியை வெல்ல முடியாது என்ற பா.ஜ.வின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போட்டுவிட்டது இந்த முடிவுகள்.

பா.ஜ.விடமிருந்து இந்தி பேசும் முக்கிய 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியதில் காங்கிரஸ் பெரும் உற்சாகத்தில் திளைக்கிறது. இதனால் மக்களவைத் தேர்தலிலும் வெற்றி நிச்சயம் என்ற நம்புகிறது.

தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக அணிதிரட்டுவதும் காங்கிரசுக்கு சுலபமாகியுள்ளது. இது வரை மாநிலக் கட்சிகளின் தயவில் கூட்டணிப்பேச்சு நடத்திய காங். இனி பெரிய அண்ணன் மனப்பான்மையில் சீட் பேரம் நடத்தும் என்று தெரிகிறது.

காங்கிரசுக்கு திடீர் உற்சாகம் தந்துள்ள இந்த முடிவுகளால் பா.ஜ.க. தரப்பு அரண்டு கிடக்கிறது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் அதற்குள் ஏதேனும் மாயாஜாலம் செய்து மக்களைக் கவர பிரதமர் மோடியும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் திட்டம் வகுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது. சுமார் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தான் அவருக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து ராஜினாமா செய்ய வைத்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடி போன்று தேர்தல் நெருக்கத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலையை பெருமளவுக்கு குறைக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

More News >>