விஸ்வாசம் சிங்கிளை அடிச்சு தூக்கிய பேட்ட டீஸர்!
பேட்ட படத்தின் டீசர் நேற்று வெளியாகிய 24 மணி நேரத்தில் 75 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசி குமார், திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் என பலர் நடித்துள்ள படம் பேட்ட இந்த படத்தின் டீசர் ரஜினியின் பிறந்த நாளான நேற்று வெளியானது.
இந்த படத்தின் டீசர் வெளியான முதல் 20 நிமிடங்களில் 5 லட்சம் பார்வைகளை பெற்றது, 40 நிமிடங்களில் 10 லட்சம் பார்வைகளை பெற்றது மேலும் 24 மணி நேரத்தில் 75 லட்சம் பார்வைகளை தொட்டு யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
வெறும் 1.32 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் ரஜினியை தவிர வேறு எந்த நடிகர்களையும் காட்டவில்லை. சுப்பர் ஸ்டார் பிறந்த நாள் பரிசாக பேட்ட படத்தின் டீசர் வெளியாகி கலக்கி வருகிறது.
டார்ஜிலிங், உத்திரபிரதேசம் என வடமாநிலங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்தது. பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக பேட்ட களம் இறங்குகிறது.
டீசரின் ரஜினியின் இளமை தோற்றமும் அனிருத்தின் மாஸ் காட்டும் பின்னணி இசையும் படத்தின் மீது எதிர்பார்ப்பை தூண்டுகிறது. இந்த படம் ரஜினி வெறியர்களுக்கு ஒரு வரபிரசாதமாக இருக்கும் என்பது நிச்சயம்.
பேட்ட இசை வெளியீட்டு விழாவுக்கு போட்டியாக விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு பாடல் வெளியாகி முதலிடத்தை பிடித்த நிலையில், பேட்ட டீஸர் வெளியான சில மணி நேரங்களிலேயே அடிச்சு தூக்குப் பாடலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது.