ரசிகர்களை ஏமாற்றுகிறாரா ஓவியா?

சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ஓவியா ஆடிய டியோ ரியோ டியா பாடலை தொடர்ந்து ஆரவ் நடித்து வரும் ராஜபீமா படத்திலும் ஓவியா குத்தாட்டம் போட்டுள்ளார்.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கதாநாயகி ஓவியா. இவர் கலகலப்பு, யாமிருக்க பயமே போன்று சில படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் இவர் மார்க்கெட் எகிறிவிட்டது.

பிக்பாஸ் முடிந்து ஒரு வருடம் ஆகியும் ஓவியாவின் எந்த படமும் வெளியாகாமல் அவர் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்குமுன் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.

ஓவியா இந்த படத்தின் கதாநாயகி இல்லை என்றாலும் படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது வெளியான ஓவியாவின் டியோ ரியோ டியா பாடல் கலக்கி வருகிறது.

படத்தில் கதாநாயகியாகவும், நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்திலும் ஓவியா நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஓவியா தனது நண்பர் ஆரவ் நடிக்கும் ராஜபீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் அவர் ஜோடியில்லை என்பதால், அப்செட்டில் ஓவியா ஆர்மி இருக்கிறது.

More News >>