இது லைகா தந்த ரஜினி பிறந்தநாள் பரிசு!

ரஜினியின் 68வது பிறந்த நாள் பரிசாக லைகா நிறுவனம் சார்பில் 2.0 டைட்டில் கார்டை யூடியூபில் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர்.

தியேட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி என வரும் டைட்டில் கார்ட்டுக்கு விசில் சத்தம் அண்ணாமலை படத்தில் இருந்து 2.0 வரை தொடர்கிறது.

ஆனால், ஷங்கர் படத்திற்கு படம், இன்ட்ரோ டைட்டில் கார்டில் தனது மேஜிக்கை காட்டி அசத்துகிறார்.

தியேட்டரில் 3டியில் இந்த டைட்டிலை பார்த்த ரசிகர்கள், 200 ரூபாய்க்கு இதுவே வொர்த் என சொன்ன நிலையில், அந்த இன்ட்ரோ டைட்டிலை ரஜினியின் பிறந்த நாள் பரிசாக யூடியூபில் அனைவரும் பார்க்கும் வண்ணம் லைகா வெளியிட்டுள்ளது.

உலக தரத்தில் உள்ள 3டி டைட்டிலை 2டியில் பார்த்தாலும் 3டி எஃபெக்ட் கொடுப்பது நிச்சயம் தலைவர் மேஜிக் தான்.

More News >>