லிங்கா நாயகியை இப்படி ஏமாற்றிவிட்டதே அமேசான்!
லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹாவை அமேசான் நன்றாக ஏமாற்றியுள்ளது.
அமேசான் லைட்னிங் ஸ்டீல் சேலில், 18000 ரூபாய்க்கு சோனாக்ஷி ஆர்டர் செய்த போஸ் ஹெட்செட்டுக்கு பதிலாக, அவருக்கு அமேசான் தரப்பில் இருந்து வந்த பார்சலில், வெறும் இரும்பு துண்டு மட்டுமே இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சோனாக்ஷி, அமேசானில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை, புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு, அமேசானிடம் நேரடியாக டேக் செய்து கேள்வி எழுப்பினார்.
இதனை கண்ட அமேசான் ஹெல்ப், தவறுக்கு மன்னிக்கவும், உடனடியாக உங்கள் பிரச்சனை சரிசெய்யப்படும் என பதில் ட்வீட் போட்டது. அந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்த சில நெட்டிசன்கள், சோனாக்ஷி பெரிய நடிகை என்பதால் தான் அமேசான் பதில் கூறுகிறது. சாமனியர்களுக்கு இதுபோல் நடந்தால் கஸ்டமர் கேர் போனைக் கூட எடுப்பதில்லை என குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவரைப் போலவே பலரும் குரல் கொடுத்தும் அவற்றுக்கு அமேசான் ஹெல்ப் எந்தவித பதிலும் கூறவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் நடிகர் நகுல், ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு காஸ்ட்லியானா ஐபோன் ஒன்றை ஃபிளிப்கார்டில் ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு 5000 ரூபாய் மதிப்பிலான கொரியன் மொபைல் பார்சலில் வந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஆன்லைனில் வாங்க ஆசைப்படும் மக்களை பெரு நிறுவனங்களோ இல்லை அதில் வேலை செய்யும் ஊழியர்களோ ஏமாற்றி வருகின்றனர். இனிமேல், எந்த பொருளை வாங்கினாலும் அன்பாக்ஸிங் அல்லது சீலை பிரிக்கும் முன்னர் வீடியோ எடுத்துக் கொள்வது சாமனியர்களுக்கு நல்லது. இல்லையென்றால், முறையிட்டாலும் பலன் கிடைக்காது.