ராசியில்லா ராஜா தென்மாவட்ட தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் திமுகவில் இணைந்தார்
யார் இந்த அய்யாத்துரை பாண்டியன்? - திமுக உடன்பிறப்புகளுக்கு ஷாக் கொடுத்த 'ராசி'-EXCLUSIVE
தென்மாவட்ட தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தென்மாவட்டத்தில் பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக வலம் வருபவர் அய்யாதுரை பாண்டியன். அமெரிக்க நிறுவனம் ஒன்றில் சிஇஓவாக இருந்து சம்பாதித்த சொத்து என கூறப்படுகிறது.
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். ஆனால் அய்யாதுரை பாண்டியன், ஜெயலலிதாவை சந்தித்த சில நாட்களில் படுத்த படுக்கையானார்.
அதேபோல் சசிகலாவையும் அவர் சந்தித்தார். அதன்பின்னர் சசிகலாவும் சிறைக்குப் போனார். இதன் பின்னர் அரசியல் ஆர்வம் காட்டாமல் இருந்தார் அய்யாதுரை.
தற்போது லோக்சபா தேர்தல் நெருங்குவதால் சீட் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கையில் திமுகவில் இணைந்திருக்கிறார் அய்யாதுரை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.