ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் அஸ்வின், ரோகித் இல்லை!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக அஸ்வின், ரோகித் ஷர்மா விலகியுள்ளனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அடிலெயிட்டில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நாளை (டிசம்பர்-14) நடக்கவுள்ளது.
இந்த போட்டியில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் ரோகித் ஷர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை.
அஸ்வினுக்கு இடது பக்க வயிற்றில் பிடிப்பு, ரோகித் ஷர்மாவிற்கு முதுகு பகுதியில் காயம் என்பதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முழங்கால் காயத்தால் இளம் வீரர் பிரித்வி ஷா வெளியேறினார், இதனைப் போல் தொடர் வெளியேற்றம் காரணமாக இந்திய அணி சற்று பலவீனம் அடைந்துள்ளது.
இவர்களுக்கு பதிலாக 13 பேரைக் கொண்ட இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர்.