2018 கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த பிரியா வாரியர்!
2018ம் ஆண்டு கூகுளில் அதிகம்பேரால் தேடப்பட்ட பிரபலம் கண் சிமிட்டலால் இளைஞர்களை கவர்ந்த பிரியா வாரியர் தான்.
இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் விளையாட்டு குறித்த தேடல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பிபா கால்பந்து போட்டி 2018; சினிமா, கிரிக்கெட் தேடல்களை தாண்டி முதல் இடத்தை பிடித்துள்ளது.
பிபா உலகக்கோப்பை 2018, லைவ் ஸ்கோர், ஐபிஎல் 2018 ஆகியவை டாப் மூன்று டிரெண்டிங்காக தேடலில் இருந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ரஜினியின் 2.0 படம் அதிகம் கூகுளில் தேடப்பட்ட திரைப்படமாக விளங்குகிறது. அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் மலையாள படத்தில் கண் சிமிட்டி இளைஞர்களை மயக்கிய இளம் நடிகை பிரியா வாரியர் இடம் பிடித்துள்ளார்.
இந்தியத் திரைப்படங்களில் 2.0 படம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தி திரைப்படங்களில் பாகி-2, ரேஸ்-3, டைகர் ஜிந்தா ஹை, சஞ்சு ஆகியவை அதிகம் கூகுள் செய்யப்பட்டுள்ளன. ‘அவெஞ்சர்ஸ்: இன் பினிட்டி வார்’ இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்ட ஹாலிவுட் திரைப்படமாகும்.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியான பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் டாப் 5 டிரெண்டிங் பட்டியலில் உள்ளனர். அதேபோல் திருமணங்களில் இந்திய மக்களைக் கவர்ந்தது பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம், தீபிகா படுகோனே திருமணம், அனுஷ்கா ஷர்மா திருமணம், ஆகியவை 2018-ல் டாப் டிரெண்டிங் செய்திகளில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.