செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைகிறார்- கரூரில் இருந்து ஆதரவாளர்கள் புறப்பட்டனர்
தினகரனின் அமமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைகிறார்,. இதற்காக அவரது ஆதரவாளர்கள் கரூரில் இருந்து இன்று சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
தினகரனின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த செந்தில் பாலாஜி, அமமுகவில் இருந்து கடந்த சில நாட்களாக ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
அவர் தகுதி நீக்க எம்.எல்.ஏக்களையும் அழைத்துக் கொண்டு திமுகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி எப்போது இணைவார் என்பதிலும் யூகங்கள் ரெக்கை கட்டி பறந்தன.
இந்நிலையில் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இன்று சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து தாங்களும் திமுகவில் இணைய இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.