மீடூ புகாருக்குப் பின் பட வாய்ப்புகள் வரவில்லை ஸ்ருதி புலம்பல்
மீடூ இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் மீது புகார் கூறியதிலிருந்து தன்னுடன் பணியாற்ற அனைவரும் தயங்குகிறார்கள் என்று ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார்.
நிபுணன் படத்தில் நடிக்கும்போது பட தளத்தில் தன்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றார் என்று அர்ஜூன் மீது ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமன்றி ஸ்ருதி ஹரிஹரன் மீது வழக்குபதிவு செய்துள்ளார் நடிகர் அர்ஜூன்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் ”நான் காயப்பட்டாலும் பரவாயில்லை என்னால் எதிர்காலத்தில் சில பெண்கள் இத்தகைய பிரச்சனைகளை சொல்ல முன்வருவார்கள். முன்பெல்லாம் வாரத்திற்கு மூன்று படங்கள் வரும் எனக்கு பிடித்த புதுமை வாய்ந்த கதையை தேர்ந்து நடிப்பேன். செப்டம்பர் மாதம் எனது பெரிய படம் ஒன்று வெளியானது. அதன் பிறகு பட வாய்ப்புகள் வருவது குறைந்தது. மேலும் அனைவரும் என்னுடன் பணியாற்ற தயங்குகிறார்கள்”, என்று தற்போது ஸ்ருதி ஹரிஹரன் புலம்பி வருகிறார்.
வைரமுத்து மீது புகார் அளித்த சின்மயிக்கும், தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.