வைரலாகும் நாகினி மெளனி ராயின் குத்தாட்டம்!
கன்னட நடிகரான யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் படத்தில் நாகினி புகழ் மெளனி ராய் போட்ட குத்தாட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
கோலார் கோல்டு ஃபீல்டு என்பதன் சுருக்கமான கேஜிஎஃப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகிறது.
இதன் தமிழ் உரிமையை விஷால் வாங்கி வெளியிடுகிறார். இதன்காரணமாகத் தான் மற்ற பெரிய நடிகர்கள் படத்தை வெளியிட அனுமதி வழங்காமல் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் பிரச்சனைகள் எழுந்தன. ஆனால், அனைவரும் பெரிய நடிகர்கள் என்பதால், விஷால் நினைத்த சோலோ ரிலீஸ் இந்த படத்திற்கு அமையவில்லை.
மாரி 2, கனா, சீதக்காதி, அடங்கமறு, சர்வம் தாள மயம், சிலுக்குவார்பட்டி சிங்கம் படங்களுடன் யாஷின் கேஜிஎஃப் படமும் ரிலீசாகிறது.
இத்தனை ஹீரோக்களின் ஈகோ கிளாஷில் எந்த படம் ஓடும் என்பது படத்தை பொறுத்தே அமையும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேஜிஎஃப் படத்தில் நாகினி புகழ் பாலிவுட் நாயகி மெளனி ராய் குத்தாட்டம் போட்டுள்ள கலி கலி வீடியோ பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
ஒரே நாளில் 35 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூபில் வைரலாகி வருகிறது. இந்த பாட்டின் வெற்றி கேஜிஎஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.