நெல்லை ரூ100 கோடி, அரக்கோணம் ரூ50 கோடி.. திமுகவில் கூவி கூவி விற்கப்படும் லோக்சபா தொகுதிகள்!

திமுகவில் லோக்சபா தேர்தல் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் இத்தனை கோடி ரூபாய் செலவு செய்யக் கூடிய நபர்கள் யார்? யார்? என பட்டியல் எடுத்து அவர்களை வேட்பாளராக்குவதில் அண்ணா அறிவாலயம் தீவிரமாக இறங்கியுள்ளதாம்.

நெல்லையை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தமது ஆதரவாளர்களுடம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் நேற்று இணைந்தார். இது தொடர்பாக நாம் விசாரித்த பொது, லோக்சபா தேர்தலில் நெல்லையில் போட்டியிட அய்யாதுரை பாண்டியன் விரும்புகிறாராம்.

இதற்காக ரூ100 கோடி வரை செலவு செய்யவும் அவர் ஒப்புதல் தெரிவித்திருக்கிறாராம். இதையடுத்தே அவர் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைய சிக்னல் கிடைத்தது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

இதேபோல் அரக்கோணம் தொகுதிக்கு ரூ50 கோடி செலவு செய்யுங்க.. நீங்களே வேட்பாளர் என ஒரு வடதமிழக பிரமுகரிடம் திமுக தலைமை பேசியிருக்கிறது. இதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் புலம்பி வருகிறாராம் அந்த பிரமுகர்.

அதேநேரத்தில் மத்தியில் எப்படியும் நம்ம தயவில்தான் அடுத்த ஆட்சி.. அதனால் உங்களுக்கு அமைச்சர் பதவியை உறுதி செய்யலாம் எனவும் தூண்டில் போடுகிறதாம் அறிவாலயம். ஆனாலும் இன்னமும் அந்த பிரமுகர் பிடி கொடுக்கவில்லையாம்.

இப்படி ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் இத்தனை கோடி ரூபாய் செலவு செய்ய ரெடியாக இருப்பவர்களை வேட்பாளராக அறிவிப்பது என்கிற புது பார்முலாவை திமுக நடைமுறைப்படுத்துகிறது. இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

- எழில் பிரதீபன்

 

More News >>