தமிழகத்தில் போகி பண்டிகை கொண்டாட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும், தமிழர்கள் இன்று பழையதை தீயிட்டு எரித்து போகி கொண்டாடினர்.

தமிழர்கள் தை திருநாளுக்கு முந்தைய நாள், போகி பண்டிகை கொண்டாடுவார்கள். “பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற முறையை பின்பற்றி, தமிழர்கள் தங்கள் வீட்டினுள் உள்ள பழையதை தீயிட்டு எரித்து போகி கொண்டாடுவார்கள்.

இந்த போகி பண்டிகையில், பழையன கழிதல் என்பதற்கு அர்த்தம் பழைய, தேவையற்ற பொருட்களை எரிப்பது மட்டுமல்ல, ஒவ்வொருவரின் மனதிலும் உள்ள தீய குணங்களும் எரித்து, நல்ல குணங்கள் மனுதில் புகுத்த வேண்டும் என்பது தான்.

போகியை கொண்டாடும் வகையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் போகி பண்டிகை கலைகட்டியது. குடும்பத்தினர், அதிகாலை 3 மணியளவில் எழுந்து, பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். அப்போது, சிறுவர்களும் அதிகாலையே எழுந்து, மேளம் அடித்து போகி பண்டிகையை கொண்டாடினர்.

இதனால், சென்னையில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு புகைமூட்டம் அதிகமாக இருந்தது.

More News >>