இந்தியாவுடனான 2வது டெஸ்ட்: முதல் நேர ஆட்ட முடிவில் ஆஸி., 277/6

பெர்த் டெஸ்டில் இந்தியாவுடனான 2வது டெஸ்ட் முதல் நேர ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியா பெர்த் நகரில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் அஸ்வின் ரோகித் சர்மா நீக்கப்பட்டு உமேஷ் யாவ், ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், தொடக்க வீர்களாக களம் இறங்கிய ஆரோன் பிஞ்ச் மார்கஸ் ஹாரிஸ் சிறப்பாக ஆடினர். முதல்நாள் இடைவேளை வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய ஆரோன் மற்றும் மார்கஸ் ஆகியோர் உணவு இடைவேளைக்கு பிறகு 26 ஓவரில் விக்கெட் 66 ரன்கள் சேர்த்தது.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், ஆரோன் பிஞ்ச் 103 பந்தில் அரைசதம் அடித்து பின்னர் வெளியேறினார். தொடர்ந்து, உஸ்மான் கவாஜா 5 ரன்களும், ஹாரிஸ் 70 ரன்களும், ஹேண்ட்ஸ்காம்ப் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், ஷேன் மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இதில், ஷேன் மார்ஷ் 45 ரன்கள் எடுத்தும் டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்தும் சேர்த்து வெளியேறினார்.

தொடர்ந்து, கேப்டன் டிம் பெய்ன் உடன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும்வரை விக்கெட் இழக்காமல் இருந்தனர். இதன்மூலம், ஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>