மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பிய இலியானா!
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் வலம் வந்த இலியானா பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் பாலிவுட்டுக்கு படையெடுத்துள்ளார்.
கேடி படத்தில் அறிமுகமான இலியானா பல படங்களில் நடித்து இருந்தார். இங்கு இருக்கும் போதே இந்தி சினிமாவில் கவனம் செலுத்திய அவர் பர்ஃபி, ஹேப்பி எண்டிங், ரஸ்டம், மெயின் டெரா ஹீரோ, ரெய்டு, முபாரகான் போன்ற பல படங்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு சில படங்கள் சரியாக ஓடாததால் ஆறு வருடம் கழித்து அவர் மீண்டும் தென்னிந்தியா பக்கம் வந்தார். தெலுங்கில் அவர் நடித்த அமர் அக்பர் ஆண்டனி என்ற படம் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்தது.
இதனால் மீண்டும் பாலிவுட்டுக்கு படையெடுத்துள்ள இலியானா, ஜான் ஆபிரஹாம் நடிக்கவுள்ள ’சாடே சாத்தி’ படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
அனீஸ் பஸ்மி இயக்கும் இந்த படம் காமெடி ஜானரில் உருவாகவுள்ளதாம். 2017ல் வெளிவந்த முபாரகான் படத்திற்கு பிறகு ஜான் ஆபிரஹாமுடன் இலியானா ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.