அமெரிக்காவில் தமிழ்ச்சங்கத்தின் மாபெரும் தைப் பொங்கல் திருவிழா
அமெரிக்காவில், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைந்த மாபெரும் தைப் பொங்கல் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது.
அமெரிக்காவில், தமிழ்நாடு அரசின் இயல், இசை மற்றும் நாடகம் மன்றம் சார்பில் முதல்முறையாக மாபெரும் தைப் பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. கலைமாமணி விருதுகள் பெற்ற சிறப்பு விருந்தினர்களுடன் தமிழ் இலக்கியம், மொழி, கலை, பண்பாடு மற்றும் விருந்தோம்பல் போற்றும் வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி அமெரிக்காவில் வாஷிங்டன் வட்டாரத் தமிழிச்சங்கத்தின் மாபெரும் பொங்கல் திருவிழாவாக நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் முதன்முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாஷிங்டன் பகுதி மகளிர் வழங்கும் பருத்தி ஆடை அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி Walter Johnson High School, 6400 Rock Spring Dr, Bethesda, MD 20814 என்ற இடத்தில் நடைபெறுகிறது.