சிறந்த எம்.பி விருது: ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி
டெல்லியில் நேற்று சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற திமுக எம்.பி கனிமொழி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதாக திமுக எம்.பி கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான லோக்மட் விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விருது பெற்ற கனிமொழி இன்று சென்னை திரும்பினார். அப்போது, கனிமொழிக்கு திமுக மகளிர் அணி சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பிறகு, இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினைள நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.