தொடர்ந்து உயருகிறது பெட்ரோல் விலை: கவலையில் வாகன ஓட்டிகள்
கடந்த 57 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த பெட்ரோல விலை மீண்டும் உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தினமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 57 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக வேதனையடைந்தனர்.
இதன் பிறகு, 57 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. தொடர்ந்து, 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல் டீசல் விலை குறைந்து வந்தது என்றும் தேர்தல் முடிவுகளுக்க பிறகு விலை ஏறக்கூடும் என்றும் கருதப்பட்டது. அதேபோல், கடந்த கடந்த 13ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கியது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.72.99 ஆக விற்பனையாகிறது. ஆனால், டீசல் விலையில் 8 காசுகள் குறைந்து ரூ.68.10க்கு விற்பனையானது.
குறைந்துவந்த பெட்ரோல் விலை மீண்டும் உயரத் தொடங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.