அஜித்தின் 59வது படத்தில் நடிக்கிறார் ரங்கராஜ் பாண்டே
போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 59வது படத்தில் பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளார்.
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்க இருக்கும் 59வது படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளிவந்து அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'பிங்க்' படத்தை ரீமேக் செய்து தமிழில் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் தான் நடிகர் அஜித் நடிக்கிறார்.
இந்த படத்தை 'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அஜித்தின் 59வது படமான இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படம், வரும் 2019ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் தந்தி டிவியில் பணிபுரிந்த பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில், ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தி டிவியில் பணிபிரிந்து வந்த ரங்கராஜ் பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.