அய்யய்யோ மின்சார மன்னன் நத்தம் விஸ்வநாதனா? வேண்டாம் சாமீ...அலறும் திமுக உடன்பிறப்புகள்

அமமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார். இதைப் போல முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் விரைவில் திமுகவுக்கு தாவப் போவதாக திண்டுக்கல் மாவட்டத்தில் தீயாய் நேற்று செய்திகள் பரவின. இதை நாம்தான் முதலில் பதிவு செய்தோம்.

திண்டுக்கல் அரசியலில் என்னதான் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்திருந்தாலும் நத்தம் விஸ்வநாதன் தனிக்கச்சேரிதான். அவரை சீனிவாசனும் மதிப்பது இல்லை. சீனிவாசனை நத்தம் விஸ்வநாதனும் மதிப்பது இல்லை.

இருவரும் அதிமுக நிகழ்ச்சிகளிலேயே மல்லுக்கட்டிய சம்பவங்களும் உண்டு. சில நாட்களுக்கு முன்னர் நத்தம் விஸ்வநாதன் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அடிக்கப்பட்ட போஸ்டர்களில் மாவட்ட அமைச்சரான சீனிவாசன் பெயரே போடக் கூடாது என உத்தரவிட்டிருந்தார் நத்தம் விஸ்வநாதன்.

இந்த விவகாரம் திண்டுக்கல் முழுவதும் பல் இளித்துக் கொண்டிருக்கிறது. மேலும் திண்டுக்கல்லில் திமுகவின் அடையாளமாக இருக்கும் ஐ.பெரியசாமியுடன் ரகசிய டீலிங்கில் நத்தம் விஸ்வநாதன் இருப்பதை நாடும் நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.

அதனால்தான் அவரது கூட்டாளி ஐ. பெரியசாமியை எதிர்த்து ஆத்தூர் தொகுதியில் நிற்க வைத்து ஜெயலலிதா திருப்திபட்டுக் கொண்டார். இந்த பின்னணியில்தான் நத்தம் விஸ்வநாதன் திமுகவுக்குப் போகிறார் என செய்திகள் வெளியாகின; அவர் மறுத்துவிட்டதாகவும் சில ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

அதேநேரத்தில் நத்தம் விஸ்வநாதனா வேண்டாம் சாமீ என ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக உடன்பிறப்புகள் கட்சி தலைமைக்கு வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.

More News >>