சோனியா தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு- ட்விட்டரில் #GoBackSonia முழக்கமிடும் பாஜக
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பாஜக மற்றும் தமிழ்த் தேசிய குழுக்கள் ”#GoBackSonia” முழக்கத்தை டிரெண்டாக்கி வருகின்றன.
தமிழக உரிமைகளை பறித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து சென்னை வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi என்னும் முழக்கம் உலக அளவில் டிரெண்டிங்கானது. இதற்கு பதிலடி கொடுக்க பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.
தற்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழகம் வருகின்றனர். தற்போது ஈழத் தமிழர் படுகொலையை முன்வைத்து #GoBackSonia என்ற முழக்கத்தை பாஜக மற்றும் தமிழ்த் தேசிய சக்திகள் ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றன.
இதேபோல் #StatueOfKalaignar #StatueOfCorruption #WelcomeSonia ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன.