எச்.ராஜா உதவியுடன் பலாத்கார குற்றவாளி நித்தியானந்தா சாமியார் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?
பலாத்கார வழக்கின் குற்றவாளி சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து செயல்பட்டு வந்தார் நித்தியானந்தா. அவரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இதை நித்தியானந்தா தரப்பு மறுத்தது. மேலும் நித்தியானந்தா மீது பலாத்கார புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக கர்நாடகாவில் வழக்கும் தொடரப்பட்டது.
இவ்வழக்கில் ஆண்மை பரிசோதனைக்கு நித்தியானந்தா ஒத்துழைக்க மறுத்து வந்தார். நீதிமன்றத்துக்கும் டிமிக்கி கொடுத்து வாய்தா வாங்கி வந்தார்.
இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உதவியுடன் அவர் தப்பி ஓடிவிட்டார்.
வெளிநாட்டில் அகதியாக அடைக்கலம் கோரி தஞ்சம் அடைந்திருக்கிறார் என விவரித்து இருக்கிறார் பியூஷ் மனுஷ்.
பியூஸ் மனுஷ் வெளியிட்ட வீடியோ: