உலக பாட்மிண்டன் தொடர்- சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தார் சிந்து!

உலக பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சீனாவின் குவாங்ஸோ நகரில் உலக பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் ரட்ச னோக் இன்டனானை வீழ்த்தினார்.

இதையடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சிந்து இன்று ஜப்பானின் நோஸோமி ஒகு ஹராவை எதிர் கொண்டார்.

இப்போட்டியில் 21-19, 21-17 என நேர்செட் கணக்கில் ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து. 2016 ஒலிம்பிக் போட்டி, ஆசியக்கோப்பை விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர் சிந்து.

உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் சிந்து.

சிந்துவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

More News >>