சிறையிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் சுகபோகத்தில் வாழலாம்!

பெங்களூரு சிறையில் அதிமுக (அம்மா) கட்சி பொதுச்செயலாளர் சசிகலா சுகபோக வாழ்க்கை வாழ்ந்தற்கான ஆதரங்கள் அழிக்கப்பட்டுள்ளதான டி.ஐ.ஜி ரூபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா அடைக்கப்பட்டார். சசிகலா தரப்பிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு, சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு பல சலுகைகள் வழங்கியுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா மவுட்கில் அறிக்கை அளித்தார். இது தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சிறையில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி ரூபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டிஐஜி ரூபா டி. மவுட்கில் கூறும்போது, “சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன கடந்த வாரம் சிறையை ஆய்வுசெய்தபோது, எனது ஹேண்ட் கேமராவில் எடுத்த வீடியோ ஆதாரங்களை சிறை அதிகாரிகள் அழித்துள்ளனர். நான் கேட்ட வீடியோ, புகைப்பட ஆதாரங்களை என் பென்டிரைவில் பதிவேற்றித் தரவில்லை. சசிகலா அறையின் அருகேயுள்ள சமையலறை, அங்கிருந்த சமையற் பொருள்கள் அப்புறப்படுத்தப் பட்டிருக்கின்றன. சசிகலா அறையில் நான்கு நாற்காலிகள் ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. இதுவெல்லாம் நான் பதிவு செய்திருந்தேன். சிறப்பு சமையலறை, தொலைக்காட்சி , ஏ.சி என அனைத்து வசதிகளுடன்தான் சசிகலா அங்கு வசித்து வருகிறார் எனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதான ஏ.கே.தெல்கியின் அறை வீடியோ காட்சிகள் கன்னட தனியார் தொலைக் காட்சியில் வெளியாகியுள்ளது. தெல்கிக்கு உதவ 2 சிறைக் கைதிகள் பணியில் உள்ளனர். தெல்கிக்கு தேவைப்பட்ட நேரத்தில் கை, கால், முதுகு உள்ளிட்ட இடங்களில் மசாஜ் செய்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் தெல்கிக்கு நல்ல அருமையான உணவு வழங்கப்படுகிறது. எல்சிடி டி.வி பார்த்துக்கொண்டே உணவை ருசிக்கிறார். பின்னர் சினிமா பார்க்கிறார். அவரின் அறையில் பஞ்சு மெத்தை, ப்ரிட்ஜ், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், சமயலறை இருக்கின்றன.

More News >>