கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை நான் டிவியில் பார்த்துக்கொள்வேன்.. மு.க. அழகிரி பொளேர்

தமது தந்தையும் மறைந்த முதல்வருமான கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொள்வேன் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மறைவுக்கு திமுகவில் இணைய மு.க. அழகிரி விரும்பினார். ஸ்டாலினை தலைவராக ஏற்கவும் தயார் என்றும் அழகிரி தெரிவித்திருந்தார்.

ஆனால் அழகிரி இணைவதை ஸ்டாலின் தரப்பு விரும்பவில்லை. இதனிடையே பல இடங்களில் அஞ்சா நெஞ்சன் அழகிரி பேரவை தொடங்கப்பட்டு கருணாநிதி நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக மதுரையில் அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, சிலை திறப்பு நிகழ்ச்சியை நான் டிவியில் பார்த்துக் கொள்வேன் என பதிலளித்தார்.

 

More News >>