நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? பேட்ட தீம் மியூஸிக்!
பொங்கலுக்கு வெளியாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படத்தின் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது.
ரஜினி நடந்து செல்வது போன்ற காட்சியின் பின்னணியில் படத்தின் மைய இசையான தீம் மியூஸிக் ஒலிக்கிறது. அனிருத்தின் இசையில் உருவாகும் பேட்ட திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
விஜய் சேதுபதி, நவாஸூருதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். திரை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், "ரஜினி மாட்டிகிட்டாப்ல... அவரோட நடிக்க விருப்பமான எல்லோரும் வாங்க என்று ஷேர் ஆட்டோவில் நெருக்கி ஏற்றுவதுபோல ஒரு பட்டாளத்தை ஏற்றியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்" என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சோனி மியூஸிக், பேட்ட படத்தின் தீம் மியூஸிக்கை வெளியிட்டுள்ளது. யூடியூபில் அதைப் பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர், தலைவரின் உருவம் பாட்ஷா படத்தை நினைவுபடுத்துகிறது என்று பின்னூட்டமிட்டுள்ளார்.
1 நிமிடமும் 46 விநாடிகளும் ஓடக்கூடிய இந்த இசைத்துணுக்கின் இறுதியில், "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்ற வரிகள் ஒலிக்கின்றன