இந்தியாவில் கிடைக்கும் ஒரே 10 ஜிபி RAM போன்

ஆண்டுதோறும் ஸ்மார்ட்போன்களின் இயக்கவேகத்தை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதிக இயக்கவேகம் கொண்டவையாய் தங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்வது பெயரை தட்டிச் செல்வதில் நிறுவனங்கள் குறியாய் உள்ளன.

RAM என்று குறிப்பிடப்படும் இயக்கவேகம் 8 ஜிபி கொண்ட ஸ்மார்ட்போன்கள் பரவலாகவே கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களில் முன்னணி ரகங்களில் பல 8 ஜிபி இயக்கவேகம் கொண்டவையே.

2018ம் ஆண்டு ஒன்பிளஸ், விவோ, நுபியா மற்றும் ஸோமி ஆகிய நிறுவனங்கள் 10 ஜிபி இயக்க வேகம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.

ஒன்பிளஸ் 6டி மெக்லாரென்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது 6டி மெக்லாரென் ஸ்மார்ட்போனை 10 ஜிபி இயக்கவேகம் கொண்டதாக அறிமுகம் செய்தது. வார்ப் சார்ஜ் 30 என்ற தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 20 நிமிடத்தில் ஒருநாளுக்குத் தேவையான மின்னாற்றலை தேக்கிக் கொள்ளக்கூடியது.

மெக்லாரென் நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் இணைந்து முதன்முறையாக தயாரிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.256 ஜிபி சேமிப்பளவுடன் 10 ஜிபி இயக்க வேகத்துடன் கிடைக்கும் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் மட்டுமே இந்தியாவில் தற்போது வாங்கக்கூடிய 10 ஜிபி போன் ஆகும். இதன் விலை 50,999 ரூபாயாகும்.

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளங்கள் மூலம் மட்டுமன்றி அவற்றின் கடைகளிலும் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் போனை வாங்கலாம். டிசம்பர் 15ம் தேதி முதல் இது விற்பனைக்கு வந்துள்ளது.

விவோ நெக்ஸ் டியூயல் டிஸ்பிளே, ஸோமி மி மிக்ஸ்3, ஸோமி பிளாக் ஷார்க் ஹீலோ ஆகியவையும் 10 ஜிபி இயக்கவேகம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்றாலும் அவை இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை.

More News >>